Home Page

About Me

My photo
We will help you to find suitable investment methods to achieve your goals (short term / long term) in efficient way. We will provide all type of Mutual Fund investments (Debt Fund, Gold Fund, ELSS Fund, RGESS Fund, Equity Fund and Balanced Funds). To know more about Mutual Funds / Your Investments contact us today. We are very happy to assist you.

Sunday, 1 December 2019

செய்தி: நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும் எஸ்.ஐ.பி.,

சம­ பங்கு மியூச்­சு­வல் பண்ட்­களில், எஸ்.ஐ.பி., முறை­யில் செய்­யப்­படும் முத­லீடு, நீண்ட கால நோக்­கில் நல்ல பலன் அளிப்­ப­தாக, ‘கிரி­சில்’ அமைப்­பின் ஆய்வு தெரி­விக்­கிறது.


பொது­வா­கவே, நிதி உல­கில் நீண்ட கால நோக்­கில் முத­லீடு செய்ய வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது. பங்கு முத­லீடு போன்­றவை நீண்ட கால அடிப்­ப­டை­யில் அதிக பலன் தர வல்­லவை.மியூச்­சு­வல் பண்ட் முத­லீடு இதற்கு ஏற்­ற­தாக அமை­கிறது. சம­ பங்கு சார்ந்த மியூச்­சு­வல் பண்ட்­களில், எஸ்.ஐ.பி., எனும் சீரான முத­லீடு முறை­யில் முத­லீடு செய்­ய­லாம்.

சம பங்கு மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­களில் பல­னுக்கு உறுதி அளிக்க முடி­யாது என்­றா­லும், நீண்ட கால நோக்­கில் இவை நல்ல பலன் அளித்­தி­ருப்­ப­தாக, ‘கிரி­சில்’ அமைப்பு ஆய்வு தெரி­விக்­கிறது.

கடந்த, 15 ஆண்­டு­க­ளுக்­கான, சம பங்கு நிதி­க­ளுக்­கான செயல்­பாடு குறி­யீடு அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வு, எஸ்.ஐ.பி., முத­லீட்­டில் காலம் அதி­க­ரிக்­கும் போது, எதிர்­மறை பலன் வரு­வ­தற்­கான வாய்ப்பு குறை­வது தெரியவந்­துள்­ளது.மேலும், காலம் அதி­க­ரிக்­கும் போது,குறைந்த மற்­றும் அதிக பட்ச பல­னுக்­கான இடை­வெ­ளி­யும் குறைந்­துஉள்­ளது.மேலும், முத­லீடு காலம் அதி­க­மாக இருக்­கும் போது, அத­னால் உண்­டா­கும் செல்வ வள­மும்அதி­க­ரிப்­ப­தாக தெரிய வந்­துள்­ளது.

Friday, 8 November 2019

செய்தி: மியூச்சுவல் பண்டு முதலீடு 7.4 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துக்களின் மதிப்பு, கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில், 26.33 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது, இதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது, 7.4 சதவீதம் அதிகமாகும். இதற்கு, பங்கு மற்றும் கடன் திட்டங்களில் முதலீட்டு வரத்து அதிகரித்தது காரணமாகும்.இது குறித்து, இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான, ஆம்பி தெரிவித்துள்ளதாவது:

மொத்தம் உள்ள, 44 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், செப்டம்பர் மாதத்தில் நிர்வகித்த சொத்துக்களின் மதிப்பு, 24.5 லட்சம் கோடி ரூபாயாகும்.கடந்த அக்டோபரில் மொத்தம், 1.33 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில், 1.52 லட்சம் கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் கடன் திட்டங்களில், 93 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகள், சந்தை உயர வழிவகுத்தது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் மெல்ல முதலீடு செய்வதை நோக்கி திரும்புகிறார்கள்.இவ்வாறு, ஆம்பி தெரிவித்துள்ளது.


தகவல் ஆதாரம்: https://business.dinamalar.com/news_details.asp?News_id=45790&cat=5

Sunday, 21 July 2019

நாணயம் விகடன் 21-07-2019: முதலீட்டாளர் அனுபவம்

எங்களது முதலீட்டாளர்கள் திரு மதிவாணன் மற்றும் திருமதி அனிதா மதிவாணன் ஆகியோரின் முதலீட்டு அனுபவம் நேற்றைய நாணயம் விகடன் இதழில்... நாகராஜன் சாந்தன், மியூட்ச்சுவல் பண்ட் ஆலோசகர் (9994773647)


Sunday, 7 July 2019

நாணயம் விகடன் 07-07-2019: முதலீட்டாளர் அனுபவம்

எங்களது முதலீட்டாளர்கள் திரு MS செந்தில்குமார் மற்றும் திருமதி திவ்யா ஆகியோரின் முதலீட்டு அனுபவம் நேற்றைய (07-07-2019) நாணயம் விகடன் இதழில் ..... நாகராஜன் சாந்தன், மியூட்ச்சுவல் பண்ட் ஆலோசகர் (9994773647)


Sunday, 30 June 2019

நாணயம் விகடன் 07-07-2019: முதலீட்டில் நீங்கள் கூட்டுப்புழுவா, வண்ணத்துப்பூச்சியா?

நண்பர்களே வணக்கம்.

இந்த வாரம் வெளியான நாணயம் விகடன் இதழில் "முதலீட்டில் நீங்கள் கூட்டுப்புழுவா, வண்ணத்துப்பூச்சியா?"   என்ற தலைப்பில் பிரசுரமான எனது கட்டுரை.

நாகராஜன் சாந்தன் -  மியூச்சுவல் பண்ட் ஆலோசகர், 9994773647 



Monday, 17 June 2019

நாணயம் விகடன் 16-06-2019: முதலீட்டாளர் அனுபவம்

வாரம்தோறும் வெளிவரும் நாணயம் விகடன் இதழில், 16-06-2019 அன்று எங்களது முதலீட்டாளர்கள் திரு விஸ்வநாதன் மற்றும் திருமதி அனுராதா ஆகியோரின் முதலீட்டு அனுபவம்....


Wednesday, 27 March 2019

மியூச்சுவல் ஃபண்ட் - விழிப்புணர்வு வகுப்பு - திருப்பூர் ஜெய் ஸ்ரீராம் கல்லூரி (JAY SHRIRAM ENGINEERING COLLEGE)

நண்பர்களே வணக்கம்.


திருப்பூர் ஜெய் ஸ்ரீராம்  கல்லூரி (JAY SHRIRAM ENGINEERING COLLEGE) மாணவர்களுக்கு, மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்புணர்வு வகுப்பு நடைபெற்றது.

Date: 20-03-2019 புதன்கிழமை 

நன்றி : ஜெய் ஸ்ரீராம்  கல்லூரி கல்லூரி மற்றும் விழா அமைப்பாளர்கள்









Friday, 22 March 2019

மியூச்சுவல் ஃபண்ட் - விழிப்புணர்வு வகுப்பு - திருப்பூர் பார்க்ஸ் கல்லூரி

நண்பர்களே வணக்கம்.

திருப்பூர் பார்க்ஸ் கல்லூரி (Park’s College) மாணவர்களுக்கு, மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்புணர்வு வகுப்பு நடைபெற்றது.

Date: 06-03-2019 புதன்கிழமை 

நன்றி : பார்க்ஸ் கல்லூரி மற்றும் விழா அமைப்பாளர்கள்