சம பங்கு மியூச்சுவல் பண்ட்களில், எஸ்.ஐ.பி., முறையில் செய்யப்படும் முதலீடு, நீண்ட கால நோக்கில் நல்ல பலன் அளிப்பதாக, ‘கிரிசில்’ அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.
பொதுவாகவே, நிதி உலகில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பங்கு முதலீடு போன்றவை நீண்ட கால அடிப்படையில் அதிக பலன் தர வல்லவை.மியூச்சுவல் பண்ட் முதலீடு இதற்கு ஏற்றதாக அமைகிறது. சம பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில், எஸ்.ஐ.பி., எனும் சீரான முதலீடு முறையில் முதலீடு செய்யலாம்.
சம பங்கு மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பலனுக்கு உறுதி அளிக்க முடியாது என்றாலும், நீண்ட கால நோக்கில் இவை நல்ல பலன் அளித்திருப்பதாக, ‘கிரிசில்’ அமைப்பு ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த, 15 ஆண்டுகளுக்கான, சம பங்கு நிதிகளுக்கான செயல்பாடு குறியீடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, எஸ்.ஐ.பி., முதலீட்டில் காலம் அதிகரிக்கும் போது, எதிர்மறை பலன் வருவதற்கான வாய்ப்பு குறைவது தெரியவந்துள்ளது.மேலும், காலம் அதிகரிக்கும் போது,குறைந்த மற்றும் அதிக பட்ச பலனுக்கான இடைவெளியும் குறைந்துஉள்ளது.மேலும், முதலீடு காலம் அதிகமாக இருக்கும் போது, அதனால் உண்டாகும் செல்வ வளமும்அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment