புதுடில்லி:மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துக்களின் மதிப்பு, கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில், 26.33 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, இதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது, 7.4 சதவீதம் அதிகமாகும். இதற்கு, பங்கு மற்றும் கடன் திட்டங்களில் முதலீட்டு வரத்து அதிகரித்தது காரணமாகும்.இது குறித்து, இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான, ஆம்பி தெரிவித்துள்ளதாவது:
மொத்தம் உள்ள, 44 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், செப்டம்பர் மாதத்தில் நிர்வகித்த சொத்துக்களின் மதிப்பு, 24.5 லட்சம் கோடி ரூபாயாகும்.கடந்த அக்டோபரில் மொத்தம், 1.33 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில், 1.52 லட்சம் கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் கடன் திட்டங்களில், 93 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகள், சந்தை உயர வழிவகுத்தது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் மெல்ல முதலீடு செய்வதை நோக்கி திரும்புகிறார்கள்.இவ்வாறு, ஆம்பி தெரிவித்துள்ளது.

தகவல் ஆதாரம்: https://business.dinamalar.com/news_details.asp?News_id=45790&cat=5
No comments:
Post a Comment